கொரொனாவால் உயிரிழந்தவரின் உடல் மூலம் 24 மணி நேரத்திற்கு பின்னர் கொரொனா பரவாது..!
கொரொனாவால் உயிரிழந்த ஒருவரது உடல் மூலம் 24 மணி நேரத்திற்கு பின்னர் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பில்லை என எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பேசிய அந்த மருத்துவமனையின் தடயவியல் துறை தலைவர் டாக்டர் சுதிர் குப்தா கடந்த ஓராண்டு காலமாக கொரொனாவால் உயிரிழந்த சுமார் 100 உடல்களில் கொரொனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதை மறு ஆய்வு செய்ததாக தெரிவித்திருக்கிறார்.
ஒருவர் இறந்து 24 மணி நேரத்திற்கு பின்னர் அவரது உடலில் குறிப்பாக மூக்கு மற்றும் வாய் குழிகளில் கொரொனா வைரஸ் தொற்று இல்லை என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
ஒருவர் இறந்து 12 முதல் 24 மணி நேரம் ஆன பின்னர் அவர்களின் மூலம் மற்றவருக்குப் பரவுவதற்கு பெரும்பாலும் வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்தார்.






