தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரிய காலாப்பட்டு, காலாப்பட்டு, பிள்ளைசாவடி உள்ளிட்ட மேல மீனவ கிராமங்களில் அவ்வப்போது கடல் அரிப்பு காரணமாக மீனவர்களின் வீடுகள் கடலில் அடித்து செல்லும் நிலை ஏற்பதாக ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனை தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைக்க காங்கிரஸ் கட்சியினர் சார்பில் காலாப்பட்டு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மீனவர்களை பழங்குடியினர் இனத்தை சேர்க்க வேண்டும் கடல் எல்லைகள் குறித்து மத்திய அரசு தயாரிக்கும் வரைபடம் தொடர்பாக மீனவ மக்களின் கருத்துக்களையும் கேட்டு அறிய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அறிவுறுத்தப்பட்டது.






