--- --:--:-- --

முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்

3

சைவம்,வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்களின் விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழு அல்லது சிபிஐக்கு மாற்ற வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக புகார்கள் அளிக்கப்பட்டன. இந்த புகார்களை விசாரித்த சைபர் க்ரைம் போலீசார் அந்த புகார்களில் முகாந்திரம் இல்லை எனக்கூறி அவற்றை முடித்து வைத்தனர்.

இந்நிலையில், பொன்முடிக்கு எதிராக புகார் அளித்தவர்களில் ஒருவரான பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்கள் குறித்து முறையாக விசாரணை நடத்தப்படாமலேயே முடித்து வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

 

முன்னாள் அமைச்சர் பொன்முடி முதலமைச்சருக்கு நெருக்கமானவர் என்பதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய போலீசார் தயங்குவதாகவும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

 

எனவே, பொன்முடி மீதான புகார்களை முடித்து வைத்த உத்தரவை ரத்து செய்து அவர் மீது அளிக்கப்பட்ட புகார்களின் விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழு அல்லது சிபிஐக்கு மாற்ற வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

 

Right Menu Icon