ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை..!
குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது ஆண் குழந்தையை ராணுவ வீரர்களும் காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். கிராமத்தில் உள்ள பண்ணையில் குழந்தையின் பெற்றோர் பணியாற்றி வருகின்றனர்.
அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சிவம் நேற்றிரவு 8 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த நிலையில் சுமார் 25 அடி ஆழத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
வீரர்களும் போலீசாரும் வந்த 40 நிமிடங்களில் ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.






