--- --:--:-- --

நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை தமிழகம் வருகிறது..!

3

மிழகத்தில் நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்தியகுழு வரும் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்ய உள்ளது. அதற்காக திங்கள் கிழமை மத்திய குழு தமிழகம் வருகிறது.

 

மத்திய குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் புயல் நிவாரண தொகையை மத்திய அரசு ஒதுக்கும் முன்னதாக தமிழக முதல்வர் பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புயல் பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.

 

மேலும் நிவர் புயலால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ட்விட்டரில் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட பதிவில் புயலால் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் நிதியுதவியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் மத்திய குழு தமிழகத்திற்கு வருகிறது. தமிழகத்தை தொடர்ந்து மத்தியகுழு புதுச்சேரியிலும் ஆய்வு நடத்துகிறது.

Leave a Reply

Right Menu Icon