தவறான சிகிச்சையால் கர்ப்பிணி உயிரிழந்ததாக வழக்கு..!
கர்ப்பிணி தவறான சிகிச்சையால் உயிர் இழந்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 12 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அரியலூர் மாவட்ட முதன்மை குறைதீர்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு பிரசவத்திற்காக அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வி என்ற பெண் அதிக ரத்த போக்கு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மருத்துவர்களின் அஜாக்கிரதையால் மகள் உயிரிழந்ததாக பெற்றோர் அரியலூர் மாவட்ட குறைத்தீர் ஆணையத்தில் மருத்துவர் மீது புகார் தெரிவித்தனர். இதை விசாரித்த மாவட்ட குறைத்தீர் ஆணையம் ஐந்து வயது பெண் குழந்தை 12 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





