--- --:--:-- --

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு.. அதிருப்தி அடைந்து கேள்வி எழுப்பிய நீதிபதி..!

2

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஓய்வு பெற்ற டிஜிபி ராஜேஸ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஓய்வு பெற்ற டிஜிபி ராஜேஷ் தாசுக்கு மூன்றாண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து விழுப்புரத்தில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

 

ராஜேஷ் தாஸ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமல்ப நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அரசு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் ராஜேஷ் தாஸ் தரப்பினர் தொடர்ந்து கூறி வந்தனர்.

 

நீதிமன்ற உத்தரவுப்படி இன்று விழுப்புரம் மாவட்டம் முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு ராஜேஷ் தாஸ் ஆஜரானார். ஆனால் வாதங்களை முன்வைக்க அவர் தரப்பு வழக்கறிஞர்கள் கால அவகாசம் கோரினர்.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதி மேலும் கால அவகாசம் கேட்டு ஏன் வழக்கை இழுத்து அடித்து வருகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். ஒரு 31-ஆம் தேதி கண்டிப்பாக வாதங்களை முன்வைக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் பிப்ரவரி மூன்றாம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்து வழக்கு விசாரணையை 31ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

 

Right Menu Icon