அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது பாய்ந்த வழக்கு..!
காவல்துறையை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரி கடந்த 1ம் தேதி திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் விசாரணை தொடர்பாக மதுரை அமலாக்க துறையில் தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது போலீசாரிடம் வந்து தமிழ்நாடு ஊழல் தடுப்பு அதிகாரிகள் உள்ளே விடாமல் அமலாக்கத்துறை மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டு சர்ச்சையானது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கீத் திவாரி தொடர்பான வழக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை செய்த பொழுது பணி செய்ய விடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மதுரை தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.





