திமுக எம்பி கனிமொழியின் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கு இன்று விசாரணை..!
திமுக எம்பி கனிமொழியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிற்கு தடை கோரிய வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணை தொடங்குகிறது. தூத்துக்குடியில் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து அதே பகுதியை சேர்ந்த சந்திரகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதற்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அதை விசாரித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடையை விதித்தது.
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கை இன்று இறுதி விசாரணைக்கு வருமாறு உச்சநீதிமன்ற பதிவாளருக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து வழக்கு நீதிபதி விசாரணை நீதிபதிகள் முன்பு நடைபெறுகிறது.






