திடீரென ஃபெயிலியர் ஆன பிரேக்.. இரண்டு உயிருக்கு எமனான கார்..!
மகாராஷ்டிராவின் புனே நகரில் சாலை விபத்தில் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேக் செயல் இழந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்கள் மீது மோதியதாக தெரிகிறது.
விபத்தில் ஆறு வாகனங்கள் சேதம் அடைந்துள்ள நிலையில் மேலும் 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






