குளத்தின் மீது கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள்..!
தண்ணீரின் மேல் நடக்க முடியுமா ஓட முடியுமா என்றால் முடியும் என்கிறார்கள் காஷ்மீர் சிறார்கள். ஆனால் அதற்காக ஆண்டின் இறுதிவரை காத்திருக்க வேண்டும் என்பதுதான். அந்த சிறார்கள் ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் மைனஸ் 7 டிகிரி அளவிற்கு வெப்பநிலை குறைந்திருக்கிறது.
இதனால் நீர்நிலைகள் உறைய தொடங்கியுள்ளன. சோப்பூர் பகுதியில் பனிக்கட்டியாக உறைந்த குளத்தின் மேல் நின்று சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த காட்சி தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.





