--- --:--:-- --

அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் உடல்.. விஷம் குடித்த கள்ளக்காதலன்..!

9

சூர் அருகே தகாத உறவில் இருந்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசார் தேடுதலை அறிந்து விஷம் குடித்த கள்ளக்காதலன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

 

ஓசூர் அடுத்த கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் கிடந்த 45 வயதுக்கு மதிக்கத்தக்க பெண்ணின் சடலத்தை போலீசார் மீட்டனர். இது தொடர்பான விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த முனுசாமி என்பவரது மனைவி பூங்கொடி என தெரியவந்தது.

 

உயிரிழந்த பெண்ணின் செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார் விசாரித்ததில் கடைசியாக ஓசூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ்ப்பா என்பவர் உடன் பேசியது தெரிய வந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரிக்க முடிவு செய்திருந்தனர்.

 

போலீசார் தேடுவதை அறிந்த வெங்கடேசப்பா வீட்டில் இருந்த களைக்கொல்லி விஷம் மருந்தை குடித்து தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.

 

இதனையடுத்து அவரை மீட்டு உறவினர்கள் ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் தகவலறிந்து போலீசார் சிகிச்சைக்கு பிறகு வெங்கடேஷப்பாவிடம் பூங்கொடி கொலை செய்யப்பட்டது குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon