சொந்த ஊர் செல்ல கிளம்பிய இளைஞர்.. சென்னையில் பிரிந்த உயிர்..!
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சொந்த ஊருக்கு செல்வதற்காக வந்த இளைஞர் ஆட்டோவில் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் அவினாஷ்.
இவர் சென்னையில் பணியாற்றி வந்தார். அவிநாசிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மடிப்பாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிலிருந்து ஆட்டோவில் புறப்பட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார்.
பேருந்து நிலையம் வந்த ஆட்டோ ஓட்டுனர் அவிநாசி இறங்கச் சொல்லிய பொழுது அவர் இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலின் பேரில் வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் அல்சர் பிரச்சனை காரணமாக அவினாஷ் மூன்று நாட்களாக பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது தெரிய வந்தது. உடற்கூறாய்வுக்கு பிறகு இறப்பிற்கான காரணம் குறித்து தெரிய வரும் என தெரிவிக்கின்றனர்.





