--- --:--:-- --

நடுக்காட்டுக்குள் காரில் கிடந்த இந்திய மாணவரின் சடலம்..!

3

மெரிக்காவில் மேலும் ஒரு இந்திய வம்சாவளி மாணவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவரான அபிஜித் என்பவரின் சடலம் வனப்பகுதியில் காரில் கண்டெடுக்கப்பட்டது.

 

23 வயதான அபிஜித் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வந்தார். கடந்த ஆண்டு பாஸ்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இவர் தனது வகுப்பு தோழர்களுடன் வாடகை வீட்டில் தங்கி இருந்தார். அபிஜித் தனது வகுப்பை முடித்துவிட்டு கடந்த 11-ம் தேதி வீட்டிற்கு கிளம்பியுள்ளார்.

 

ஆனால் அவர் வீடு திரும்பாத நிலையில் கவலை அடைந்த நண்பர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் அவரது மொபைல் சிக்னலை பின் தொடர்ந்ததில் அருகில் உள்ள காட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.

 

மார்ச் 11ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அபிஜித் கொல்லப்பட்டு உடலை காருக்குள் கடத்தி காட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடரமாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon