--- --:--:-- --

கால்வாயில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தையின் உடல்..!

1

புதுக்கோட்டையில் பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தையின் உடல் கால்வாயில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. கீரனூரில் வட்டாட்சியர் அலுவலகம் செல்லும் சாலையின் அருகே பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தையின் உடல் கழிவு நீர் கால்வாயில் கிடப்பதை கண்ட பொதுமக்கள் காவலர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

 

பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் கிடந்த குழந்தையின் உடலை மீட்டு காவலர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பச்சிளம் குழந்தையின் உடலை வீசிச் சென்றது யார் என்பது குறித்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

Right Menu Icon