--- --:--:-- --

பின்னால் வந்த பைக் மோதி விபத்து..! முதியவர் காயம்..!

3

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் பின்னால் வந்து கொண்டிருந்த பல்சர் பைக்கை கவனிக்காமல் இடதுபுறமாக செல்ல முயன்ற போது விபத்துக்குள்ளான காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.

 

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் 75வது வயதான முதியவர். இவர் நாமக்கல் மாவட்டம் வேளாங்கண்ணியில் தங்கி தொழில் நடத்திவருகிறார். இன்று மாலை நாகப்பட்டினத்திலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வேளாங்கண்ணி நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

 

அப்போது திடீரென்று பின்னால் வந்த வாகனத்தை பார்க்காமல் இடது பக்கம் திரும்பியுள்ளார். அப்பொழுது பல்சர் வாகனம் அவர் வாகனம் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்களும் நிலை தடுமாறி கீழே விழுந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

 

மேலும் இவர்கள் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Right Menu Icon