--- --:--:-- --

தண்டவாளத்தில் சிக்கிய பைக்..அதிவேகத்தில் ஏறி இறங்கியதால் அதிர்ச்சி..!

8

பைக்கில் தண்டவாளத்தை கடந்து சென்று பைக் மீது ரயில் மோதிய விபத்தில் இரண்டு பேர் அதிர்ஷ்டவசமாக தப்பி ஓடினார். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே தோப்புக்கொலை கிராமத்தில் ரயில்வே பாதை அமைப்பில் இருபுறம் குடியிருப்புகள் உள்ளது.

 

இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் இந்த ரயில்வே பாதையை கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் இன்று காலை இந்த பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் வைகை தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றனர். அப்பொழுது கடலூரில் இருந்து பெங்களூர் செல்ல பயணிகள் ரயில் பைக் அருகே நெருங்கி வந்துவிட்டது.

 

இதனால் பைக்கை போட்டுவிட்டு இரண்டு பேரும் தப்பி ஓடினர். ரயில்வே போலீசார் தண்டவாளத்தில் கிடந்த பைக்கை அப்புறப்படுத்தினர். இதனால் ரயில் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

 

Right Menu Icon