பர்னிச்சர் கடைக்குள் நுழைந்த பெரிய பாம்பு..!
உளுந்தூர்பேட்டை அருகே பர்னிச்சர் கடைக்குள் பாம்பு நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சாலையில் அமைந்துள்ள பர்னிச்சர் கடையில் சுமார் 9 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு புகுந்துள்ளது.
இதனை கண்ட பெண் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி பாம்பை பிடித்து சாக்குப்பையில் அடைத்து எடுத்து சென்றனர்.





