அதிகாலையில் நடந்த பைக் ரைஸ்..இளைஞர் பலி..!
தீபாவளியன்று அதிகாலையில் ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் தலைக்கவசம் அணியாமல் பைக் பந்தயத்தில் ஈடுபட்ட வசந்த் என்ற 21 வயது உணவு டெலிவரி ஊழியர் ஜல்லிக்கல்லில் நிலைத்தடுமாறி சாலை நடுவே உள்ள காங்கிரீட் தடுப்பில் மோதி உயிரிழந்தார்.
நண்பர்கள் 7 பேர் இணைந்து பந்தயத்தில் ஈடுபட்ட நிலையில் தடுப்பின் மோதி சாலையின் மறுபக்கம் வசந்த் விழுந்த நிலையில் அவரது பைக் தீப்பொறி பறந்த நிலையில் உரசி கொண்டே சென்று விழுந்தது. அவருக்கு பின்னால் வந்த நண்பர் ஒருவர் செல்போனில் எடுத்த விபத்து தொடர்பான காட்சிகள் இப்பொழுது வெளியாகியுள்ளன.





