--- --:--:-- --

காது ஓட்டையை அடைப்பதாக கூறிய பியூட்டிஷியன்..காது அழுகிப்போனதால் அதிர்ச்சி..!

7

காதில் இருந்த ஓட்டையை அடைப்பதாக கூறி இரண்டு காதையும் அழுக வைத்த அழகு நிலைய உரிமையாளர் மீது இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை முகப்பேறு மேற்கு பகுதியைச் சேர்ந்த 36 வயதான பெண் ஒருவர் பியூட்டிஷன் பயிற்சி பெற்று வந்தார்.

 

கடந்தாண்டு ஜூன் மாதம் அரும்பாக்கம் சண்முகா நகரில் உள்ள பியூட்டி பார்லருக்கு அந்த பெண் சென்றுள்ளார். அப்பொழுது உங்களுக்கு கம்மல் போட்டு காது இறங்கி இருப்பதால் அதை அடைக்க தங்களிடம் மருந்து இருப்பதாகவும் தழும்பு இல்லாமல் அவை சரி செய்வதாகவும் அந்த பார்லர் உரிமையாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

 

அவர் கொடுத்த மருந்தை ஊற்றிய சில நாட்களிலேயே இரண்டு காதுகளும் அழுகி அறுந்து விட்டதாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது குறித்து பியூட்டி பார்லர் உரிமையாளர் மீது இளம்பெண் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon