பிறந்த சில மணி நேரத்தில் முட்புதரில் வீசப்பட்ட பெண் சிசு குழந்தை..!
திருப்பூரில் முட்புதரில் வீசப்பட்ட பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள புதர் பகுதியில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை வீசப்பட்டுள்ளது.
குழந்தை அழும் சத்தம் கேட்டு அந்த பகுதியில் சென்று பார்த்தபோது பிறந்த குழந்தை முட்பகுதியில் வீசப்பட்டது தெரியவந்தது. உடனடியாக புதரில் இருந்த குழந்தையை மீட்டு அந்த பகுதி மக்கள் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பிறந்த குழந்தையை எடுத்து வந்து அந்தப் பகுதியில் யார் வீசி சென்றனர் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.






