--- --:--:-- --

2026-ஆம் ஆண்டுக்கான விருது அறிவிப்பு..!

1

2026-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2025-ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க.விருது, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, முத்தமிழறிஞர் கலைஞர் விருது ஆகிய விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது முனைவர் சத்தியவேல் முருகனாருக்கு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார். இதே போன்று, 2025 ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கப்பட உள்ளது.
பெரியார் விருது வழக்கறிஞர் அருள்மொழிக்கும், அம்பேத்கர் விருது விசிக பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வனுக்கும், காமராசர் விருது இதயத்துல்லாவிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, 2025 ஆம் ஆண்டிற்கான மகாகவி பாரதியார் விருது நெல்லை ஜெயந்தாவிற்கு வழங்கப்பட உள்ளது.
பிரபல திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான யுகபாரதிக்கு கடந்தாண்டுக்கான பாவேந்தர் பாரதிதாசன் விருது கிட்டியுள்ளது. எழுத்தாளரும், முன்னாள் தலைமைச் செயலாளருமான இறையன்புவிற்கு தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது செல்லப்பாவிற்கும். முத்தமிழறிஞர் கலைஞர் விருது விடுதலை விரும்பிக்கும் வழங்கப்பட உள்ளது. விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் வரும் வெள்ளிக்கிழமை அன்று 5 லட்சம் ரூபாய் ரொக்கம், ஒரு சவரன் தங்கப்பதக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
Right Menu Icon