மாமூல் கேட்ட ரவுடியை ஓட ஓட விரட்டி கொன்ற ஆட்டோக்காரர்..!
சென்னையில் மாமூல் கேட்ட மிரட்டிய ரவுடி ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் ராசையா. இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் காவல் நிலையத்தில் நிலவையில் உள்ளன.
சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் முரளியிடம் தனக்கு மாமுல் தரவேண்டும் என கூறி ராசையா தகராறு செய்திருக்கிறார். இதற்கு முரளி மறுக்கவே அவரை ராசையா தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருவெற்றியூர் பேருந்து நிலையம் அருகே நண்பர்களுடன் அமர்ந்திருந்த ராசையாவே அங்கு வந்த முரளி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஓட ஓட விரட்டிக் கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார் தப்பியோடிய கொலையாளிகளை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.





