--- --:--:-- --

வீட்டை பூட்டி சாவியை கதவு அருகே ஒழித்து வைத்ததால் நடந்த விபரீதம்..!

3

வீட்டை பூட்டிவிட்டு சாவியை கதவருகே ஒழித்து வைத்து விட்டு செல்வது எவ்வளவு தவறு என்பதை உணர்த்தும் வகையில் ஒரு திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த செந்தாமரை அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

 

அதே பள்ளியுள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல செயலி மூலம் ஆட்டோவை அழைத்துள்ளார் செந்தாமரை. அழைத்துச் செல்ல பெண் ஆட்டோ ஓட்டுநர் வந்துவிட்டார். அப்பொழுது வீட்டின் கதவருகே சாவியை ஒழித்து வைத்துவிட்டு செந்தாமரை புறப்பட்டார்.

 

காமராஜர் நகர் சென்றவர் மறுநாள் வீடு திரும்பிய பொழுது கதவு திறக்கப்பட்டு ஒரு சவரன் நகை, ஐம்பதாயிரம் ரொக்கம் திருடு போனது தெரிய வந்தது. சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்.

 

செந்தாமரையை அழைத்துச் சென்ற பெண் ஆட்டோ ஓட்டுநர் அவரை இறக்கி விட்டு விட்டு அதே இடத்திற்கு திரும்பி வந்ததும் செந்தாமரை மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon