சட்டப்பேரவையில் கடும் அமளி.. அதிமுக வெளிநடப்பு..!
சட்டப்பேரவையில் இருந்து இபிஎஸ் தலைமையிலான அதிமுக MLA-க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். கே,என்.நேரு, பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகிய 3 அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது.
ஆனால், சபாநாயகர் அப்பாவு அதனை நிராகரித்தார். இதைத் தொடர்ந்து, பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.





