--- --:--:-- --

சென்னை தீவுத்திடலில் பயங்கரம்.. ராட்டினத்தில் சிக்கிய இளைஞர்..!

6

சென்னை தீவுத்திடலில் ராட்டினம் பழுது பார்க்கும் பணியின் பொழுது இணைப்பு சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்த இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. பள்ளி விடுமுறையை ஒட்டி சென்னை தீவுத்திடலில் பொருட்காட்சிகள் நடைபெற்று வருகிறது.

 

தீவுத்தொடரில் அமைக்கப்பட்டிருந்த ராட்டினம் நேற்று திடீரென பழுதானது. இதனையடுத்து ராட்டினத்தை பழுது பார்க்கும் பணியை மேற்பார்வையிட இளைஞர் சென்றுள்ளார்.

 

ராட்டினத்தின் மேடையில் இணைப்பு சக்கரத்தை நிறுத்தாமல் வலது பக்கம் பணியில் ஈடுபட்டதால் எதிர்பாராதவிதமாக இணைப்பு சக்கரத்தில் சிக்கியுள்ளார்.

 

இது குறித்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் அவரை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon