--- --:--:-- --

தென்காசி பேருந்து விபத்து.. பாதிக்கப்பட்ட கீர்த்திகாவுக்கு அரசு வேலை..!

2

தென்காசி பேருந்து விபத்தில், தாயை இழந்த பார்வை மாற்றுத் திறனாளி மகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்பேரில், அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் புளியங்குடி டி.என்.புதுக்குடியைச் சேர்ந்த மல்லிகா விபத்தில் மரணமடைந்த நிலையில், அவரது மகளான பார்வை மாற்றுத்திறனாளி கீர்த்திகா கதறி அழுதார்.

 

இதனிடையே, சிறு வயதில் தந்தையை இழந்த அவர், தற்போது தாயையும் பறிகொடுத்து விட்டதாகவும், தனது வாழ்வாதாரம், பொருளாதாரத்திற்கு வழியின்றி பரிதவிப்பதாகவும் கலங்கினார்.

இந்நிலையில், கீர்த்திகாவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பேசி, ஆறுதல் கூறினார். அவரின், சொந்த ஊரான புளியங்குடி நகராட்சி அலுவலகத்தில் அரசு வேலை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். அதன்படி முதலமைச்சர் உத்தரவின்படி, பார்வை மாற்றுத்திறனாளி கீர்த்திகாவுக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், பணி நியமன ஆணையை வழங்கினார்.

Right Menu Icon