லெக்கின்ஸ் அணிந்த படி வர தடை என கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி லெகின்ஸ் அணிந்து வரவும், துப்பட்டா அணியாத பெண்கள் கோவிலுக்கு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
துப்பட்டா இல்லாத உடை மற்றும் லெகின்ஸ் அணியும் பெண்களுக்கு கோவிலுக்குள் அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






