தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்கும்..!
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட ஒரு டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக வட தமிழக மாவட்டங்கள் தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதேபோல சென்னையில் 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆக காணப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.






