--- --:--:-- --

தெலங்கானா என்கவுன்ட்டர்: 4 பேரின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவு

10

தெலுங்கானா என்கவுண்டர் சம்பவத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்ய அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற 4 பேரை தெலுங்கானா காவல்துறை டிசம்பர் ஆறாம் தேதியை சுட்டுக்கொன்றது.

 

என்கவுண்டர் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், 4 பேரின் உடல்களை பதப்படுத்தி வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து 4 பேரின் உடல் காந்தி மருத்துவக் கல்லூரியில் பதப்படுத்தி வைக்கப்பட்டது.

 

உடல்கள் அழுகும் நிலையில் உள்ளதாக காந்தி மருத்துவமனை கண்காணிப்பாளர் கூறியதையடுத்து வரும் 23ஆம் தேதி மாலை 5 மணிக்குள் 4 பேரின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்ய தெலுங்கானா மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இதனிடையே என்கவுன்ட்டர் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வழக்கறிஞர் மணி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் என்கவுண்டர் குறித்து விசாரிக்க முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் மூன்று பேர் கொண்ட ஆணையத்தை அமைத்து கடந்த டிசம்பர் 10-ம் தேதி உத்தரவிட்டது.

Leave a Reply

Right Menu Icon