பணி சுமைகளுக்கு இடையே பலரையும் கவர்ந்து வன காப்பாளர் பாடும் வீடியோ காட்சிகள்
மேட்டுப்பாளையத்தில் பணி சுமைகளுக்கு இடையே வனகாப்பாளர் ஒருவர் பாடல் பாடும் வீடியோ காட்சிகள் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியில் வனத்துறையில் தேர்வு செய்யப்படும் வன அதிகாரிகளுக்கான களப்பயிற்சி நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் வனச்சரக அலுவலக பணிக்கு தேர்வானவர்களுக்கான கலை பயிற்சி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சிக்கு இடையே வனக்காப்பாளர் சோழமன்னன் மற்ற அதிகாரிகள் முன்பு “என்ன சத்தம் இந்த நேரம்” என்ற பாடலை பாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.






