பஞ்சர் ஒட்டி தருகிறோம் எனக்கூறி பாலியல் வன்கொடுமை செய்து எரிக்கப்பட்ட தெலுங்கானா டாக்டர்!
தெலுங்கானா மாநிலம் சம்ஸபாத் நசராபள்ளி பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் ரெட்டி விஜய்யம்மாள் தம்பதியின் மகள் பிரியங்கா ரெட்டி. தனது இருசக்கர வாகனத்தில் கடந்த 28ஆம் தேதி பிரியங்கா ரெட்டி மாலை 5 .52 மணிக்கு வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு கிளம்பி சென்றார்.
அப்போது மாலை 6.12 நிமிடங்களுக்கு தொண்டு பள்ளி சுங்கச்சாவடியில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வாடகை காரில் கட்சிபோலிக்கு பயணித்தார். இரவு 9.13 நிமிடங்களுக்கு மருத்துவமனையில் இருந்து மீண்டும் சுங்கச்சாவடி அருகே நிறுத்தப்பட்டிருந்த தனது இரு சக்கர வாகனத்தை எடுப்பதற்காக வந்தார்.
அப்போது அவரது இரு சக்கர வாகனம் பஞ்சர் ஆனது தெரியவந்தது. அங்கு வந்த லாரி ஓட்டுநர் சிவா இருசக்கர வாகனத்தை பஞ்சர் ஒட்டி தருவதாக கட்டாயப்படுத்தி பிரியங்கா ரெட்டி இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றார்.
லாரி ஓட்டுநர்களின் நடத்தையில் சந்தேகமடைந்த பிரியங்கா ரெட்டி இரவு 9 . 22 நிமிடங்களுக்கு தொண்டு பள்ளி சுங்கச்சாவடி அருகே நடக்கும் நிகழ்வுகளை தனது சகோதரிக்கு அலைபேசி மூலம் தெரிவித்தார்.
இரவு 9.30 மணி அளவில் கால்நடை பெண் மருத்துவர் பிரியங்காவை அந்த லாரி ஓட்டுநர்கள் கும்பல் ஒரு பாழடைந்த பங்களாவுக்குள் கடத்தி சென்றது.
பிரியங்காவின் செல்போன் திடீரென துண்டிக்கப்பட்டதால் அச்சமடைந்த அவரது சகோதரி இரவு 9.40 மணிக்கு மீண்டும் பிரியங்காவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அப்போது பிரியங்காவின் செல்போன் அனைத்து வைக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார்.
இரவு 10.8நிமிடங்கள் அளவில் பிரியங்காவின் உடலையும் அவரது இரு சக்கர வாகனத்தையும் லாரியில் போட்டுக்கொண்டு நான்கு பேர் கொண்ட அந்த லாரி ஓட்டுநர்கள் அங்கிருந்து கிளம்பினர். இதனால் இரவு 9.50லிருந்து 10.8 மணிக்குள் பிரியங்கா உயிர் இழந்திருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
இரவு 11 மணி 30 நிமிடங்களில் இருந்து 12 மணிக்குள்ளாக தொண்டு பள்ளியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே சென்று அவர்கள் பெட்ரோலை வாங்கியுள்ளனர். அதிகாலை 1.45 நிமிடங்களுக்கு சின்னப்பள்ளி கிராமத்தில் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டியின் உடலை லாரி ஓட்டுநர்கள் 4 பேரும் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளனர்.





