எதிரியை மது ஊற்றி கொடுத்து கொன்ற கொடூரம்!
தன்னுடைய எதிரிக்கு மது ஊற்றி கொடுத்த ஒருவர் போதையில் அவர் மயங்கியதும் எரித்துக் கொலை செய்துள்ளார். குடிப்பழக்கம் குடியை கெடுக்கும் என்ற கூற்றுக்கு இணங்க மது பழக்கத்தால் எதிரியிடம் மது அருந்திய போது எரித்துக் கொல்லப் பட்டுள்ளார் இளைஞர் ஜெய்சங்கர்.
ராமநாதபுரம் பாலசுப்ரமணியம் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் என்பவர். அந்த பகுதி நகைக்கடை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் வெளிப்பட்டனம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சுரேஷ் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டு காலமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இருவருக்கும் கடுமையான தகராறு ஏற்படவே ஜெய்சங்கரும் சுரேஷை தலையில் அடித்து காய ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருதரப்பினரும் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு கேணிக்கரை அருகே ஒரு அரசு மதுபான கடையில் சுரேஷ் மது அருந்தி கொண்டுள்ளார். அந்த வழியாக வந்த ஜெய்சங்கரை பார்த்த சுரேஷின் மனதில் விபரீத யோசனை எழுந்துள்ளது.
அவரிடம்தான் இருவரும் சமாதானமாக போகலாம் எனக் கூறி தன்னுடைய நயவஞ்சக செயலை நிறைவேற்றியுள்ளார். அவரது பலவீனத்தை பயன்படுத்தி அதிக மதுவை வாங்கி கொடுத்த அவர் மதுபோதையில் அதிகாலை ஒன்றரை மணியளவில் தரையில் விழுந்து கிடந்த ஜெய்சங்கர் மீது ஆட்டோவில் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் ஊற்றி எரித்து தமது கொடூர எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டுள்ளார்.
ஜெய்சங்கர் மது போதைக்கு அடிமையாக இருந்ததால் தான் அவரை அவரது குடும்பமும் இழந்துள்ளது. குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் எனவும் அந்த குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




