இறுதி செமெஸ்டர் தேர்வு இணைய வழியில் நடத்தப்படும்..!
பொறியியல் இறுதி பருவ தேர்வு இணைய வழியில் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் தேர்வை எழுதலாம் என அண்ணா பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது. மடிக் கணினி, கணினி, கைபேசி அல்லது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றுடன் இணையம் கேமரா மற்றும் ஆகியவற்றின் வசதிகள் இருக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 22ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சரியான விடைகளைத் தேர்வு செய்யும் வகையிலான தேர்வாக நடத்தப்படும் என்றும் விரைவில் தேர்வு அட்டவணை இணையதளத்தில் வெளியாகும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இணையவழி தேர்வுக்கான மாதிரி தேர்வுகள் மூலம் தேர்வுக்கு மாணவர்கள் பழகிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணைய வழியிலான தேர்வுகளுக்கு சார்ந்த அமைப்புகளிடம் அனுமதி கோரப்பட்டு இருப்பதாகவும் விரைவில் அனுமதி பெறப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.







