--- --:--:-- --

காலாண்டு விடுமுறையை 9 நாளாக நீட்டிக்க ஆசிரியர்கள் கோரிக்கை..!

5

காலாண்டு விடுமுறையை ஒன்பது நாட்களாக நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டுகளில் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வுக்கு பிறகு 9 நாட்கள் விடுமுறை விடப்படும்.

 

28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை என ஐந்து நாட்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சனி ஞாயிற்றுக்கிழமை மற்றும் காந்தி ஜெயந்தி வருவதால் இரண்டு நாட்கள் மட்டும் காலாண்டு தேர்வு விடுமுறையாக உள்ளது.

 

எனவே காலாண்டு விடுமுறை 9 நாட்களாக நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ராமு கடிதம் எழுதியுள்ளார். கூடுதல் விடுமுறை அறிவித்தால் விடைத்தாள் மருத்துவம் செய்ய அவகாசம் கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Right Menu Icon