கொலை வழக்கை திரும்ப பெற கோரி மிரட்டல்..குழந்தைகளுடன் குடும்பத்தினர் தர்ணா..!
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் கருப்பூர் பகுதியை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கொலை வழக்கை திரும்ப பெற கோரி வெங்கடேசன் என்பவர் தனது நண்பர்கள் மூலம் மிரட்டி வருவதாக சுபாஷ் சந்திர போஸின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
தொடர்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்பொழுது போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்ற பொழுது கதறி அழுதபடி ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.






