--- --:--:-- --

அரிய வகை நோயால் அவதிப்பட்டும் பாலிவுட் நடிகை ஆலியா பட்..!

6

பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனம் திறந்து பேசியுள்ளதன் பின்னணி வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் முன்னாடி நடிகைகளில் கவனத்தை ஈர்த்து இடத்தை பிடித்திருப்பவர் நடிகை ஆலியா பட். டாப் நடிகையாக உள்ள ஆலியா பட் தனக்கு அரியவகை நோய் இருப்பதாக கூறியுள்ளார்.

 

அது என்ன அரிய வகை என ஆராய்ந்ததில், இந்த நோயால் ஒரு விஷயத்தில் 45 நிமிடங்களுக்கு மேல் தன்னால் கவனம் செலுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.

 

தனது திருமணத்திற்காக மேக்கப் கலைஞர் இரண்டு மணி நேரம் அவகாசம் கேட்ட சூழலில் கூட தனக்கு நோய் இருப்பதை காரணம் காட்டி முடியவே முடியாது என்று சொல்லிவிட்டதாகவும் இதனால் தனது திருமணத்தில் மிகவும் குறைந்த நேரம் தான் மேக்கப் போடப்பட்டது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

ஆலியா பட்டுக்கு உள்ள அட்டென்ஷன் டெபிசிட் டிஸ்ஆர்டர் என்ற நோய் ஒருவகையான ஹைப்பர் ஆக்டிவிட்டி சம்மந்தமான கோளாறு என்றும் இதனால் எந்த ஒரு வேலையையும் கவனத்துடன் செய்ய முடியாது என்றும் மருத்துவர் ரீதியாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே நடிகை சமந்தா மற்றும் பகத் பாசில் தங்களுக்கு ஏற்பட்ட அரியவகை நோய் குறித்து மனம் திறந்த நிலையில் பாலிவுட் நடிகை ஆலியா பட் பேசியிருப்பது தனிக் கவனம் பெற்றுள்ளது.

 

Right Menu Icon