பள்ளியில் டீச்சருக்கு பாலியல் தொல்லை..!
மதுரையில் ஆசிரியர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பள்ளி தாளாளர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளியின் தாளாளரான ஷேக் டேனியல் ராஜ் என்பவர் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதோடு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மேலும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி பள்ளி தாளாளர் ஷேக் டேனியல் ராஜ் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





