நடிகர் விஜய் உடன் தன்னை ஒப்பிட்டு போட்டோ வெளியிட்ட டிடிஎப் வாசன்..!
வாரிசுப்பட இசை வெளியீட்டு விழாவின் பொழுது நடிகர் விஜய் எடுத்த செல்ஃபியை தான் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டு டிடிஎப் வாசன் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தால் சர்ச்சை எழுந்திருக்கிறது.
50க்கும் மேற்பட்ட ரசிகர்களின் புகைப்படங்களை முதுகில் பச்சை குத்தி கொண்ட டிடிஎஃப் வாசன் அடுத்தடுத்த வீடியோ வெளியிட்டு வருகிறார். அவருக்கு ஒவ்வொரு பேச்சும் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் நடுவர் விஜய்யுடன் தன்னை ஒப்பிட்டு பேசி இருக்கிறார்.
விஜய் போல நான் ஏன் வரக்கூடாது என்று கேள்வி எழுப்பியவர் பிரபலமாகிவிட்டதால் எங்கு சென்றாலும் தனக்கு பிரைவசி இல்லை எனக்கூறி இருக்கிறார்.
விஜய் எடுத்துள்ள செல்ஃபியை கோவை அன்னூரில் ரசிகர்கள் சந்திப்பின் பொழுது தான் எடுத்துக்கொண்ட செல்பியை ஒப்பிட்டு போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருப்பது விஜய் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.





