--- --:--:-- --

ஆகஸ்ட் மாதத்தில் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் டாஸ்மாக் கடை மூடல்..!

2

கஸ்ட் மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்திலும் பல்வேறு தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தொடரும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

 

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் மாதத்தில் இருக்கக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2, 9, 16 ,23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமைகள் வருகின்றன.

 

அந்த ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஊரடங்கு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து இடங்களிலும் இருக்கக்கூடிய டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். இதை அந்தந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய இயக்குனர்கள் டாஸ்மாக் பணியாளர் அனைவரும் கவனத்தில் எடுத்துக் கொண்டு அன்றைய தினம் முழு கடையடைப்பு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்டங்களுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon