டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை..!
மாநிலம் முழுவதும் நாளை திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இதேபோல், வருகிற 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த 2 நாள்களிலும் டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படாது என்று அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.
அதன்படி, மாநிலம் முழுவதும் நாளை டாஸ்மாக் மதுபானக் கடைகள், பார்கள் இயங்காது. இந்த உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.





