திருப்பூர் மாவட்டத்தின் 19,785 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திருப்பூர் மாவட்டத்தின் 19,785 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதைத்தொடர்ந்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதில் வருவாய்த்துறை சார்பில், 10,157 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், 1,191 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடுகள், மகளிர் திட்டத்தின் கீழ், 722 பயனாளிகளுக்கு மகளிர் சுய உதவிக் குழு வங்கி கடன்கள் மற்றும் சுழல் நிதி வழங்குதல், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், 55 பயனாளிகளுக்கு தேசிய தோட்டக்கலை இயக்கம், நுண்ணீர் பாசனத்திட்டம், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் ஆகிய திட்டங்களின் கீழ் உதவிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் 1,212 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், 45 பயனாளிகளுக்கு பயனாளிகளுக்கு தனிநபர் வன உரிமை ஆவணங்கள். 25 பயனாளிகளுக்கு விவசாய வன உரிமை ஆவணங்கள், அதேபோல், வேளாண்மைத்துறை சார்பில், 600 பயனாளிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் உதவிகள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 85 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரம், தேய்ப்பு பெட்டிகள், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை சார்பில், பயனாளிகளுக்கு பரிசல் வழங்குதல், நுண் கடன் வழங்குதல், தொழிலாளர் நலத் துறை சார்பில், 388 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித் தொகை, இயற்கை மரண உதவித்தொகை. விபத்து மரண உதவித்தொகை. பணியிடத்து விபத்து மரண உதவித்தொகை, ஓய்வூதியம், தாட்கோ சார்பில் 147 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டம் நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம் நரிக்குறவர் மக்களுக்கு சங்கங்களின் மூலம் கடனுதவி, தூய்மை பணியாளர்களுக்கு கடன் உதவிகள், இயற்கை மரணம், ஈமச்சடங்கு, கல்வி, மகப்பேறு ஆகியவற்றிற்கு உதவித் தொகைகள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், 179 பயனாளிகளுக்கு அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ஆணைகள்,மேலும், வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில், 75 பயனாளிகளுக்கு பவர் டில்லர், பவர் வீடர், தென்னை மட்டை தூளாக்கும் கருவிகள், ரோட்டோவேட்டர், ஆழ்துளை கிணறு மற்றும் பண்ணை குட்டை அமைத்தல், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை சார்பில், 33 பயனாளிகளுக்கு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், கலைஞர் கைவினை திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டம். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் உதவிகள், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், 3,462 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில், 43 பயனாளிகளுக்கு திறன்பேசிகள், பெட்ரோல் ஸ்கூட்டர்கள், பேட்டரி வீல் சேர்கள், மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள். கூட்டுறவுத் துறை சார்பில், 1,239 பயனாளிகளுக்கு பயிர்க்கடன், சுய உதவிக் குழு கடன், மத்திய காலக்கடன், வீட்டு அடமானக் கடன், நகை பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு கடன், தானிய ஈட்டுக் கடன், மாற்றுத்திறனாளி கடன், டாம்கோ கடன், பால்வளத் துறை சார்பில், 62 பயனாளிகளுக்கு மேக கணினி பால் பகுப்பாய்வு கருவிகள், பால் கொள்கலன் குளிர்விப்பான்கள் என பல்வேறு துறைகளின் சார்பில் ரூ. 295 கோடியே 29 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 19,785 பயனாளிகளுக்கு முதலமைச்சர் வழங்கினார்.
விழாவில், மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஈஸ்வர சாமி, திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மனிஷ் நாரணவரே, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 15 வேலம்பாளையத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், திருமுருகன்பூண்டி நகராட்சியில் உள்ள திருப்பூர் மினி டைடல் பூங்காவிலிருந்து தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, சட்டமன்ற உறுப்பினர் கே. செல்வராஜ், டிட்கோ மற்றும் டைடல் பார்க் மேலாண்மை இயக்குநர் திரு. சந்தீப் நந்தூரி, திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் குமார். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.





