--- --:--:-- --

திருப்பூர் : 35 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் 

10.1

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு விழாவில் ரூ.1,426.89 கோடி மதிப்பீட்டில் 61 முடிவுற்ற பணிகளை திறந்து  வைத்து, 35 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 11.08.2025 அன்று திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.949 கோடியே 53 லட்சம் செலவில் 61 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.182 கோடியே 06 லட்சம் மதிப்பீட்டிலான 35 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.295 கோடியே 29 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 19,785 பயனாளிகளுக்கு வழங்கினார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், திருப்பூர் மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் ரூ.798 கோடியே 88 லட்சம் செலவில் பாதாள சாக்கடை பணிகள், திருப்பூர் கோவில்வழி பகுதியில் ரூ.34 கோடியே 80 லட்சம்செலவில் புதிய பேருந்து நிலையம், மூலனூர் பேரூராட்சி, அண்ணா நகரில் ரூ.2 கோடியே 8 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொது சேவை மையக் கட்டிடங்கள்.
உணவு தானியக் கிடங்குகள், ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள். ஊராட்சி மன்ற அலுவலக கட்டடங்கள், நியாய விலைக் கட்டிடங்கள். நூலகக் கட்டிடங்கள், உணவு சேமிப்பு கிடங்கு, அங்கன்வாடி கட்டிடங்கள், வட்டார சுகாதார நிலையம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் வகுப்பறை கட்டிடங்கள், சமுதாயக் கூடங்கள், துணை சுகாதார நிலையங்கள் என ரூ.10 கோடியே 90 லட்சத்து 76 ஆயிரம் செலவிலான முடிவுற்ற பணிகள் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், பல்லடம் சேமிப்புக் கிடங்கில் ரூ.2 கோடியே 36 லட்சத்து 33 ஆயிரம் செலவில் கூடுதலாக 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு, நீர்வளத் துறை சார்பில், காங்கேயம் வட்டம், வீரணம்பாளையம், காட்டு நாயக்கன்பாளையம் அருகில் வட்டமலைக்கரை ஓடையில் ரூ.3 கோடியே 91 லட்சம்  செலவில் தடுப்பணை, மகளிர் திட்டம் சார்பில், தளி பேரூராட்சி, திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவி செல்லும் வழியில் ரூ.10 லட்சம் செலவில் ஒரு தற்காலிக மதி அங்காடி, தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில், திருப்பூர், திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியில் ரூ.39 கோடியே 44 இலட்சம் ரூபாய் செலவில் மினி டைடல் பூங்கா, வனத்துறை சார்பில், சின்னார், மனுப்பட்டி, காங்கயம் ஆகிய இடங்களில் ரூ.20 இலட்சத்து 57 ஆயிரம் செலவில் வனச்சோதனை சாவடிகளில் முன் கள பெண் வன ஊழியர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள், அமராவதி வனச்சரகத்தில் ரூ.11 இலட்சத்து 57 ஆயிரம் செலவில் வனக்காவலர் குடியிருப்புகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அவிநாசி அரசு மருத்துவமனையில் ரூ.6 கோடி செலவில் தாய் சேய் நலப் பிரிவுக் கட்டடம். 15.வேலம்பாளையத்தில் ரூ.48 கோடியே 68 லட்சம் செலவில் புதிய அரசு மருத்துவமனை, ரூ.50 லட்சம்  செலவில் குன்னத்தூர் வட்டார பொது சுகாதார அலகு, பள்ளபாளையம், அங்கேரிபாளையம், ஈ.ஆர்.பி.நகர் ஆகிய இடங்களில் ரூ.90 லட்சம் செலவில் துணை சுகாதார நிலைய கட்டிடங்கள், பால்வளத் துறை சார்பில், தளவாய்ப் பட்டணம் மற்றும் தண்ணீர்பந்தல் பாளையம் ஆகிய இடங்களில் ரூ.65 லட்சம் ரூபாய் செலவில் தொகுப்பு பால் குளிர்விப்பு நிலையங்கள் என மொத்தம் ரூ.949 கோடியே 53 லட்சம் செலவில் 61 முடிவுற்ற பணிகளை  முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதேபோல் .திருப்பூர் மாவட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், சின்னக்காம்பாளையம் பேரூராட்சியில் ரூ.1 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் புதிய அலுவலகக் கட்டடம், கன்னிவாடி பேரூராட்சியில் ரூ.5 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்துதல், குன்னத்தூர் பேரூராட்சியில் ரூ.3 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள், ருத்ராவதி பேரூராட்சியில் ரூ.1 கோடியே 54 லட்சம்  மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிகள், திருப்பூர் மாநகராட்சியில் ரூ.58 கோடியே 4 லட்சம் மதிப்பீட்டில் உயிரி எரிவாயு கலன்கள் மற்றும் ரூ.46 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் பிரதான அலுவலகக் கட்டடம், பேரறிஞர் அண்ணா மத்திய பேருந்து நிலையம் மற்றும் கூடுதல் பேருந்து நிலையங்களில் ரூ.2 கோடியே 49 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள், அண்ணாநகர் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் ரூ.1 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அமராவதி ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு புதுப்பையில் ரூ.13 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், அவிநாசி, தாராபுரம், குடிமங்கலம், குண்டடம், மடத்துக்குளம், மூலனூர், பல்லடம், பொங்கலூர், திருப்பூர். உடுமலைப்பேட்டை, ஊத்துக்குளி, வெள்ளகோவில் ஆகிய இடங்களில் ரூ.19 கோடியே 51 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் சாலைகள் மேம்படுத்தும் பணிகள். நல்லம்மாள்புரம் மற்றும் மேட்டுப்பாளையத்தில் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கூடங்கள் மற்றும் உணவுக் கூடங்கள் அமைக்கும் பணிகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.23 கோடியே 75 லட்சம்  மதிப்பீட்டில் 50 படுக்கை வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டிடம், ரங்கசமுத்திரம், சுண்டக்காம்பாளையம், சின்னபொம்மன் சாலை. பெருமாநல்லூர் எ.வடுகபாளையம் ஆகிய இடங்களில் ரூ.2 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் துணை, ஆரம்ப மற்றும் பொது சுகாதார நிலைய கட்டிடங்கள், வேளாண்மைத்துறை சார்பில், சாமளாபுரம்-பல்லடத்தில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் துணை வேளாண்மை விரிவாக்க மையம், என மொத்தம், ரூ.182 கோடியே 06 லட்சம் மதிப்பீட்டில் 35 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
விழாவில், மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஈஸ்வர சாமி, திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மனிஷ் நாரணவரே, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Right Menu Icon