திருப்பூர் எல்.ஆர்.ஜி. பெண்கள் கல்லூரியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு கையொப்பமிடுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
திருப்பூர் எல்.ஆர்.ஜி. பெண்கள் கல்லூரியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு கையொப்பமிடுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாநகர போக்குவரத்து உதவி ஆணையர் சேகர் பங்கேற்பு..!
திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் மற்றும் தமிழக அரசின் அறிவுரைபடி, திருப்பூர், பல்லடம் ரோடு, கலெக்டர் அலுவலகம் அருகில் செயல்பட்டு வரும் எல்.ஆர்.ஜி. பெண்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான கையொப்பமிடுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு எல்.ஆர்.ஜி. அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) முனைவர் நளினி தலைமை தாங்கினார்.
கே.ஆர்.எஸ். கல்வி நிறுவன தாளாளர், முனைவர், ஜோய்சேகர் இயற்கை நிறுவன – யசோதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாநகர போக்குவரத்து உதவி ஆணையர் சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன்.
மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து, அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்தில் உள்ளவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன். போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணை நிற்பேன்.

மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்கேற்பேன் என்று உளமார உறுதி கூறுகிறேன் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை கல்லூரி மாணவிகள் எடுத்தனர். போலீஸ் உதவி ஆணையர் ஏ.சேகர் மாணவிகளுக்கு கீழ்க்கண்ட உறுதிமொழிகளை எடுத்துக் கூற கூற 1600 மாணவிகளும் உற்சாகத்துடன் திரும்ப கூறி கீழ்க்கண்ட உறுதிமொழி ஏற்றனர்.
பின்னர், இன்று முதல் தமிழ்நாட்டில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆதரிப்பேன் என்றும், போதைப் பொருட்களை ஒழிக்க, அரசுக்கு துணையாக இருப்பேன் என்றும் இங்கு கையெழுத்து இடுகிறேன் இந்த உறுதிமொழியை ஏற்று அனைத்து கல்லூரி மாணவிகளும், பேராசிரியர்களும் கையொப்பமிட்டனர்.





