--- --:--:-- --

போக்குவரத்து போலீசார் வழங்கிய ஒப்புகை சீட்டில் தமிழை காணவில்லை: உதயநிதி ஸ்டாலின்

10

தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறையினரால் வழங்கப்படும் அபராத ஒப்புகைச் சீட்டில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போக்குவரத்து துறை வழங்கிய ஒப்புகைச்சீட்டு நகலை தனது டுவிட்டர் பக்கத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

அதில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின் காவல் துறை வழங்கிய ஒப்புகை சீட்டில் தமிழை காணவில்லை என குறிப்பிட்டுள்ளார். இந்தி மொழியை தேசிய மொழி என மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியபோது இருமொழிக் கொள்கையை கடைபிடிக்கிறோம் என முதல்வர் பழனிசாமி கூறியது இந்தி மற்றும் இங்கிலீஷ் தான் என சொல்லாமல் விட்டது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon