இந்தியா – சீனா இடையே படைகளை திரும்ப பெறுவது குறித்து பேச்சு வார்த்தை..!
கிழக்கு லடாக் விவகாரம் தொடர்பாக இந்தியா – சீனா இடையே 3 ஆண்டுகளுக்கு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தியா – சீனா எல்லை விவகாரங்கள் தொடர்பான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு குழுவினர் சீனா தலைநகரில் சந்தித்து பேசினார்.
இந்த பேச்சுவார்த்தை இந்தியா தரப்பில் கிழக்கு ஆசியாவுக்கான வெளியுறவு இணைச் செயலாளர் ஷில்பா லடாக் இலையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து படைகளை திரும்ப பெறுவது குறித்து இருநாட்டு அதிகாரிகளும் விவாதித்தனார்.
ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 18வது சுற்று பேச்சு வார்த்தையை விரைவில் நடத்த முடிவு செய்யப்பட்டது. படைகளை திரும்ப பெறுவது குறித்து ஆக்கப்பூர்வமாக விவாதிக்கப்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும் சீனா தரப்பில் கூறப்பட்டுள்ளது.






