--- --:--:-- --

பள்ளி மாணவிகளை தரக்குறைவாக பேசிய பேருந்து நடத்துனர்..!

2

புதுக்கோட்டை மாவட்ட கந்தர்வகோட்டை அருகே பள்ளி மாணவிகளை தரக்குறைவாக பேசியதாக அரசு பேருந்து நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். குலத்து நாயக்கன்பட்டியில் இருந்து அரசு பள்ளிக்கு சென்ற மாணவிகளை பேருந்து நடத்துனர் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

 

இதனை கண்டித்து மாணவிகள் பெற்றோர்கள் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர். அதன்படி நடத்துனர் சுப்பிரமணியை பணியிடை நீக்கம் செய்து அவரை வேறு மண்டலத்திற்கு மாற்றம் செய்யவும் உத்தரவிட்டனர்.

 

Right Menu Icon