போதையில் ஆபாசமாக பேசி தகராறு..!
கிருஷ்ணகிரி மாவட்ட ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை புதூர் பகுதியில் சிறுவர்கள் தாக்கியதில் போதை ஆசாமி ஒருவர் உயிரிழந்தார். கட்டிடம் மேஸ்திரி தம்பிதுரை என்பவர் த அமர்ந்து மது அருந்திய பொழுது அந்த வழியாக சென்ற சிறுவர்கள் இருவரிடம் ஆபாசமாக பேசி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
அப்பொழுது வாக்குவாதம் முற்றி சிறுவர்கள் தாக்கியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த தம்பிதுரைக்கு தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள தேன்கனிக்கோட்டை போலீசார் தலைமறைவான இரண்டு சிறுவர்களை தேடி வருகின்றனர்.





