இன்ஸ்டாகிராமில் வருகிறது Take a Break அம்சம்..!
போட்டோ ஷரிங் தளமான இன்ஸ்டாகிராமில் பயனர்களின் வசதிக்காக ஒரு புதிய அம்சத்தை சோதித்து வருகிறது இன்ஸ்டாகிராம் இந்த அம்சத்திற்கு Take a Break என்று பெயரிடப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் பயனர்கள் தங்கள் வசதிக்கேற்ப அதை ஆன் அல்லது ஆஃப் செய்ய முடியும். இடைவேளைக்கு 10 மற்றும் 20, 30 நிமிடங்கள் இருக்கும்.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் ட்விட்டரில் இது குறித்த வீடியோவை பகிர்ந்துள்ளார். மேலும் இது போன்ற பல அம்சங்கள் வரும் காலங்களில் பயனர்களுக்காக வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.






