ஆராய்ச்சியாளரை ஓடஓடத் துரத்திய வாள் மீன்..!
மனிதரை ஓட ஓடத் துரத்திய வாள் மீனின் வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வால்மீன்கள் கடற்கரையில் இருந்து 600 முதல் 800 மீட்டர் ஆழத்தில் வாழ்கின்றன. கடலில் உள்ள மீன்கள் சக்திவாய்ந்த மற்றும் வேகமான மீன்களாகும்.
அவை மனிதர்களை தாக்கும் அல்லது கொள்ளும் குணம் கொண்டவை. அவற்றைப் பற்றி ஆய்வு செய்ய விரும்பினார். ஒருவர் இதற்காக பிரேசில் கடற்கரையில் ஆழ்கடலில் 120 அடிக்கு கீழே கடலின் அடிவாரத்தில் சென்றார். அந்த ஆராய்ச்சியாளரை 5 அடி நீளமுள்ள வாள் மீன் ஒன்று தொடர்ந்து தாக்க தொடங்கியது.
அவரது ஆக்ஸிஜன் சிலிண்டரின் தாக்கத் தொடங்கிய பொழுது சிலிண்டரில் சிக்கிக் கொண்ட அந்த வாள் மீன் தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றது. வாள் மீன் தாக்குதலால் பயந்துபோன ஆராய்ச்சியாளர் உடனே நீரின் மேல் மட்டத்திற்கு விரைந்து வரச் செய்தார்.
என்றாலும் அவரை பின்தொடர்ந்து வந்து தாக்கியது. சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இந்த சம்பவம் தற்போது இணையத்தில் உலாவி வருகிறது.





